Thuglak Online Store

Vegama Vivegama - ACD
[SA234]

Rs.150.00

Product Description

வேகமா? விவேகமா?


உளவியல் ஆலோசகர்
பிருந்தா
ஜயராமன்

கோபம் எல்லோருக்கும்
வரும். அதற்குத் தகுந்த காரணமும் உண்டு; ஆனால் பெரும்பாலும் பிறர் அந்தக் காரணத்தை
ஏற்றுக் கொள்வதில்லை. ஏன் கோபம் வருகிறது, அதை எல்லோரும் எப்படி வெளிப்படுத்துகிறோம்,
நமது கோபத்தால் நமக்கும், பிற உறவுகளுக்கும் வரும் தீங்குகள், கோபத்தைச்
சரியாகக் கையாள்வதால் ஏற்படும் பலன்கள், கோபத்தைபற்றிய சரியான கண்ணோட்டங்கள்
போன்ற விவரங்கள் இங்கே பேசப்பட்டிருக்கின்றன. தன்னிடம் ஆலோசனை கேட்டு அணுகிய
பலருக்கும் கோபத்தைச் சரியானமுறையில் கையாளக் கற்றுக்கொடுத்த அனுபவம், உளவியல்
ஆலோசகர் பிருந்தா ஜயராமனை இந்த முயற்சியில் ஈடுபட வைத்தது.

உளவியலில்
பட்டங்கள் பல பெற்று, ஆலோசனைத் துறையில் பதினைந்து வருட அனுபவம் கொண்ட இவரிடம்
ஆலோசனை பெற்று தெளிவடைந்த குழந்தைகள், பெற்றோர், தம்பதிகள் உண்டு. தவிர இவர்
கம்பெனிகளிலும், கல்வி நிறுவனங்களிலும், நடத்தும் பயிலரங்கங்களினால் பயனடைந்த
மக்கள் பலர். உளவியல் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க இவரது நிறுவனம்,
'ஆங்க்கர் செல்ப்-ஹெல்ப் ஆக்ஸஸ்' (Anchor Self-Help Access [ASHA]) பல விழிப்புணர்வு
முகாம்கள் நடத்தி வருகிறது. உளவியல் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு, ஆலோசனை
உத்திகளைப் பற்றி பயிற்சி அளித்து வருகிறது. பிருந்தா ஜயராமன் தொலைக்காட்சி,
வானொலி, பத்திரிகைகள் என்று எல்லா ஊடகங்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். கணவன்
மனைவியாகக் குரல் கொடுத்தவர்கள்- எஸ்.ஏ. ஹரிஹரன், சாஸ்வதி பிரபு.

This product was added to our catalog on Tuesday 11 December, 2012.